/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயியை தாக்கிய வாலிபர் கைது
/
விவசாயியை தாக்கிய வாலிபர் கைது
ADDED : செப் 19, 2024 11:56 PM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கரும்பு தோட்டத்திற்குள் தனிமையில் பள்ளி மாணவியுடன் சென்றதை எச்சரித்த விவசாயியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் மூவரை தேடி வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த கனியாமூர் சேர்ந்த நல்லியப்பன் மகன் ரமேஷ்,42; நமச்சுவாயபுரத்தில் இவருக்கு சொந்தமான நிலத்தில் கரும்பு மற்றும் மஞ்சள் பயிரிட்டுள்ளார். இவரது கரும்பு தோட்டத்திற்குள் கடந்த 17 ம் தேதி மாலை பங்காரம் காலனியைச் சேர்ந்த செல்வம் மகன் தனுஷ்,20; தான் காதலிக்கும் பள்ளி மாணவியை அழைத்து சென்று பேசியுள்ளார்.
இதனை பார்த்த ரமேஷ், கரும்பு தோட்டத்திற்கு பெண்ணை அழைத்து கொண்டு வரக்கூடாது என்று தனுைஷ கண்டித்து அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தனுஷ், நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு தனது நண்பர்கள் அதே ஊரைச் சேர்ந்த பாலன் மகன் முரளி, அய்யாசாமி மகன் திருவேங்கடம், வடிவேல் மகன் ரஜினி ஆகியோருடன் நமச்சுவாயபுரம் ஏரிக்கரை பாலம் அருகே பைக்கில் சென்ற ரமேைஷ வழிமறித்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ரமேஷ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் நான்கு பேர் மீது வழக்குப் பதிந்து தனுைஷ கைது செய்தனர். அதேபோல் தனுஷ் கொடுத்த புகாரில் ரமேஷ் மீதும் வழக்குப் பதிந்துள்ளனர்.