ADDED : டிச 11, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த கரடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 42; சங்கராபுரம் மெயின் ரோட்டில் பெட்டி கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்றவர், மீண்டும் 11:00 மணிக்கு திருப்பி வந்து பார்த்தபோது, கடையில் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த 5,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.
திருக்கோவிலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

