நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் ஷோரூமில் ரூ. 2.74 லட்சம் பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரத்தில் கள்ளக்குறிச்சி மெயின் ரோடில் தனியார் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 2 நாள் விற்பனை பணத்தை மேஜை டிராயரில் வைத்து சென்றனர். நேற்று காலை ஷோரூம் திறந்தபோது, மேஜை டிராயரில் இருந்த பணம் மாயமாகி இருந்தது. மேலாளர் சசிக்குமார் அளித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.