/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழகத்தில் ஏழைகளுக்கான ஆட்சி இல்லை திருக்கோவிலுாரில் அண்ணாமலை காட்டம்
/
தமிழகத்தில் ஏழைகளுக்கான ஆட்சி இல்லை திருக்கோவிலுாரில் அண்ணாமலை காட்டம்
தமிழகத்தில் ஏழைகளுக்கான ஆட்சி இல்லை திருக்கோவிலுாரில் அண்ணாமலை காட்டம்
தமிழகத்தில் ஏழைகளுக்கான ஆட்சி இல்லை திருக்கோவிலுாரில் அண்ணாமலை காட்டம்
ADDED : ஜன 29, 2024 06:17 AM

திருக்கோவிலுார், : 'தமிழகத்தில் ஏழைகள் இருக்க வேண்டும் என திட்டமிட்டு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது' என, பா.ஜ., அண்ணாமலை பேசினார்.
பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண்; என் மக்கள்' யாத்திரையின் 165வது சட்டசபை தொகுதியாக நேற்று முன்தினம் திருக்கோவிலுார் தொகுதியில் யாத்திரை மேற்கொண்டார். அவர், பஸ் நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
சனாதன தர்மத்தை வளர்ப்பதில் திருக்கோவிலுார் முதல் இடத்தில் உள்ளது. தொகுதியின் முன்னாள் அமைச்சர் பொன்முடி மிக முக்கியமான புள்ளி. அப்பா அமைச்சர், மகன் எம்.பி., குறுநில மன்னரைப் போல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பொன்முடி மீது மூன்று வழக்குகள் உள்ளன. இவர்களுக்கு மக்கள் மீது அன்பு, பாசம் இல்லை. இவர்களால் ஊருக்கு வளர்ச்சி வராது.
தமிழகத்தில் ஆண்ட கட்சியும் சரி, ஆளுகின்ற கட்சியாக இருந்தாலும் சரி, ஏழை ஏழையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்த சுற்றுப்பயணத்தில் நான் கண்டது என்னவென்றால், தமிழகத்தில் ஏழைகள் இருக்க வேண்டும் என திட்டமிட்டு ஆட்சி நடப்பதை உணர முடிகிறது.
அரசியல் மாற்றம் வேண்டும் என்பதற்காக இவ்வளவு பேர் இங்கு கூடி இருக்கிறீர்கள். இந்த முறை நாம் நரேந்திர மோடிக்காக ஓட்டு போட வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.