/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடம், விறகு, காய்கறிகளுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு
/
குடம், விறகு, காய்கறிகளுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு
குடம், விறகு, காய்கறிகளுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு
குடம், விறகு, காய்கறிகளுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு
ADDED : ஏப் 21, 2025 10:35 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு காய்கறி, குடம், விறகு, பாத்திரம் உள்ளிட்ட பொருட்களுடன் மனு அளிக்க வந்த நபர்களால் பரபரப்பு நிலவியது.
உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், செல்லதுரை, சுரேஷ் மற்றும் சிலர் பாத்திரம், குடம், விறகு, காய்கறி உள்ளிட்ட பொருட்களுடன் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் கூறுகையில், 'வீடு இல்லாமல் பல ஆண்டுகளாக தவித்து வருகிறோம். அரசு திட்டத்தின் கீழ் எங்களுக்கு வீடு வழங்கக்கோரி பல முறை மனு அளித்துள்ளோம்.
ஆனால், அதிகாரிகளுக்கு சாதகமாக இருப்பவர்களுக்கும், அரசு திட்டங்களில் பயனடைந்தவர்களுக்கும் வீடு வழங்குகின்றனர். இதை கண்டித்து இங்கேயே சமைப்பதற்காக காய்கறி, பாத்திரங்களுடன் வந்துள்ளோம்.
உரிய ஆய்வு செய்து எங்களது குடும்பங்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
தொடர்ந்து, போலீசார் அறிவுரையின் பேரில், மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.