/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் தி.மு.க., சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு பரிசு
/
தியாகதுருகம் தி.மு.க., சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு பரிசு
தியாகதுருகம் தி.மு.க., சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு பரிசு
தியாகதுருகம் தி.மு.க., சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு பரிசு
ADDED : அக் 01, 2025 12:51 AM

தியாகதுருகம்; தியாகதுருகம் ஒன்றிய, நகர தி.மு.க., சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு ஆயுத பூஜை பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
தியாகதுருகம் ராயல் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, தலைமை பொதுக்குழு உறுப்பினர் மணி மாறன், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் தாமோதரன், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணை சேர்மன் சங்கர் முன்னிலை வகித்தனர்.
தியாகதுருகம் நகர மற்றும் ஒன்றியத்தில் உள்ள 700 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை மற்றும் ஆயுத பூஜை பரிசு தொகுப்பை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வழங்கினார். நிர்வாகிகள் எத்திராஜ், கணேசன், அருட்செல்வன், மகாதேவி, மூர்த்தி, முரசொலிமாறன், அக்பர் உசேன், பரசுராமன், அமுதா, முருகன், பிரதீப்குமார், சிவக்குமார், கோவி முருகன், மூர்த்தி, செல்வம், சண்முகம், பழனிசாமி, அப்துல்சமது, அஜித்குமார், பாலு, நேசமணி, சசிகுமார் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.