/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போலி வக்கீலுக்கு 6 ஆண்டு சிறை திருக்கோவிலுார் கோர்ட் தீர்ப்பு
/
போலி வக்கீலுக்கு 6 ஆண்டு சிறை திருக்கோவிலுார் கோர்ட் தீர்ப்பு
போலி வக்கீலுக்கு 6 ஆண்டு சிறை திருக்கோவிலுார் கோர்ட் தீர்ப்பு
போலி வக்கீலுக்கு 6 ஆண்டு சிறை திருக்கோவிலுார் கோர்ட் தீர்ப்பு
ADDED : மார் 27, 2025 03:04 AM

திருக்கோவிலுார்,:
திருக்கோவிலுார் கோர்ட்டில், வலம் வந்த போலி வக்கீலுக்கு, 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து, தீர்ப்பு வழங்கப்பட்டது.
திருக்கோவிலுார் அடுத்த ஜி.அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன் மகன் வீரன், 39; இவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் உறுப்பினராக போலியாக பதிவு செய்து, திருக்கோவிலுார் கோர்ட்டில், வக்கீல் தொழில் செய்து வருவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து திருக்கோவிலுார் வக்கீல் சங்க செயலாளர் சரவணகுமார் கடந்த, 2022ம் ஆண்டு நவம்பரில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து, கோர்ட் விசாரணைக்கு உட்படுத்தினர்.
வழக்கை விசாரித்த திருக்கோவிலுார் மாஜிஸ்திரேட் வெங்கடேஷ்குமார், போலிச்சான்றிதழ் மூலம் வக்கீலாக பணி செய்து ஏமாற்றியது நிரூபிக்கப்பட்டதால், 6 ஆண்டு கடுங்காவல், ரூ. 40 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
வீரன், கோர்ட்டில் ஆஜராகாததால், சிறையில் அடைக்க வேண்டி பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.