ADDED : ஜன 17, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் புதிய காலனியில் நடந்த நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி தமிழ்ச்சங்க துணைதலைவர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். திருக்குறள் முன்னணி கழக தலைவர் பிரகாஷ், விருகாவூர் தமிழ் சங்க தலைவர் பிச்சைப்பிள்ளை, முன்னிலை வகித்தனர். ரோஜாகுழு தலைவி ரஷிதாபானு வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளுவர் தின பேச்சு, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். தொடர்ந்து பங்கேற்ற அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. ரம்யா நன்றி கூறினார்.