/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலூர் பெரிய ஏரிக்கரை சாலை மோசம்! வாகன ஓட்டிகள், மாணவர்கள் கடும் அவதி
/
திருக்கோவிலூர் பெரிய ஏரிக்கரை சாலை மோசம்! வாகன ஓட்டிகள், மாணவர்கள் கடும் அவதி
திருக்கோவிலூர் பெரிய ஏரிக்கரை சாலை மோசம்! வாகன ஓட்டிகள், மாணவர்கள் கடும் அவதி
திருக்கோவிலூர் பெரிய ஏரிக்கரை சாலை மோசம்! வாகன ஓட்டிகள், மாணவர்கள் கடும் அவதி
ADDED : மார் 07, 2024 01:01 AM

திருக்கோவிலுார் : தேவியகரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டவும் முடியாமல் ஒதுங்கவும் முடியாமல் பரிதவிக்கின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த தேவியகரம் கிராமம். இக்கிராமத்திற்கு திருக்கோவிலுார் பெரிய ஏரிக்கரை வழியாக இரண்டு கிலோ மீட்டர் துாரம் பயணிக்க வேண்டும். இதற்காக ஏரிக்கரை மீது சாலை போடப்பட்டுள்ளது.
தரமற்ற வகையில் சாலை அமைக்கப்பட்டதால் குண்டும் குழியுமாக மோசமான அளவில் உள்ளது. இதன் காரணமாக தேவியகரம், கட்சிக்குச்சான், ஏரவலம், காட்டுப்பையூர் சென்று வந்த மூன்று தனியார் மினி பேருந்துகள் நிறுத்தப்பட்டு, செட்டித்தாங்கல் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
எனவே தேவியகரம், கச்சிக்குச்சான் பகுதிகளிலிருந்து திருக்கோவிலுார் செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் சென்றால், சாலை சரியில்லாத காரணத்தால் ஒதுங்க கூட முடியாது. இதற்கு காரணம் ஏரிக்கரையின் மீது திருக்கோவிலுாரில் உள்ள கோழிக்கறி கடை, ஓட்டல்களில் இருந்து கழிவுகளை ஏரிக்கரையில் கொட்டுகின்றனர்.
இதனை உண்பதற்காக மாடுகள் சாலையோரம் போட்டி போட்டுக் கொண்டு நிற்பதாலும், ஒதுங்க முடியாத அளவிற்கு சாலையோரம் கொட்டப்பட்டிருக்கும் கோழி கழிவுகளாளும் நடந்து செல்பவர்களும் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களும் வாகனத்தை ஓட்ட முடியாமலும், ஒதுங்கவும் முடியாமல் அல்லல் படுகின்றனர்.
கோழி கழிவுகள் ஏரியில் வீசப்படுவதால் ஏரி தண்ணீர் மாசுபட்டு அதில் வளர்க்கப்படும் மீன்களும் உண்பதற்கு தகுதி இல்லாததாக வளர்ந்து வருகிறது. விவரம் அறிந்தவர்கள் திருக்கோவிலுார் ஏரி மீனை யாரும் வாங்குவதில்லை. இதன் காரணமாக இங்கு பிடிக்கப்படும் மீன்கள் வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்கப்படுகிறது. சுகாதார சீர்கேட்டிற்கு முக்கிய காரணம் கழிவு பொருட்கள் ஏரிக்கரையில் கொட்டப்படுவது தான்.
நகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தாலும் அசுத்தம் செய்யும் அடாவடிகாரர்களை கண்டறிந்து அபராதம் விதிப்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே ஏரியில் கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்படும் அத்துடன் ஒன்றிய நிர்வாகம் தேவையாகாரம் செல்லும் ஏரிக்கரை சாலையை நிரந்தரமாக சீரமைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

