/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் திருக்கோவிலுார் சிக் ஷா கேந்திரா இன்டர்நேஷனல் பள்ளி
/
மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் திருக்கோவிலுார் சிக் ஷா கேந்திரா இன்டர்நேஷனல் பள்ளி
மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் திருக்கோவிலுார் சிக் ஷா கேந்திரா இன்டர்நேஷனல் பள்ளி
மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் திருக்கோவிலுார் சிக் ஷா கேந்திரா இன்டர்நேஷனல் பள்ளி
ADDED : அக் 01, 2025 12:38 AM

கல்வியுடன் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தி சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கும் கோவிலாக சிக் ஷா கேந்திரா இன்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என பள்ளியின் செயலாளர் செந்தில் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;
திருக்கோவிலுார் அடுத்த குச்சிப்பாளையம் பகுதியில் விஸ்தாரமான இட வசதியுடன் கடந்த 2013ம் ஆண்டு துவங்கப்பட்டது சிக் ஷா கேந்திரா இன்டர்நேஷனல் பள்ளி. சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ், நீட் ஜே.இ.இ., உள்ளிட்ட உயர் படிப்பிற்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.
மாணவர்களின் தனித்திறனை வளர்க்க சிலம்பம், கராத்தே, ஸ்கேட்டிங், பரதநாட்டியம் என 40 விதமான கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
ஜூடோ டேக்வாண்டோ உள்ளிட்ட போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்று தேசிய அளவில் டில்லியில் நடந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர்.
'ஏசி' வசதி செய்யப்பட்ட வகுப்பறைகளில் படக்காட்சிகள் மூலம் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது.
கிராமப்பகுதி மாணவர்கள் தரமான உயர்கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கில் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசும் திறனை இயற்கையாகவே பெரும் சூழலை உருவாக்கி கொடுத்திருக்கிறோம்.
சென்னை ஹிந்துஸ்தான் கல்லுாரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பதால் உயர் கல்விக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், கல்லுாரியிலேயே வேலை வாய்ப்பும் உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது.
கல்வியுடன் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தி சமுதாயத்தில் உயர் நிலையை பெற்று சிறந்த எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் கல்வி கோயிலாக சிக்ஷா கேந்திரா பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு செந்தில் கூறினார்.