/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வரஞ்சரம் சிவன் கோவிலில் திருப்பணி பாலாலய பூஜை
/
வரஞ்சரம் சிவன் கோவிலில் திருப்பணி பாலாலய பூஜை
ADDED : ஜூலை 08, 2025 12:32 AM

தியாகதுருகம் : தியாகதுருகம் அடுத்த வரஞ்சரம் கிராமத்தில் பழமை வாய்ந்த பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலை செப்பனிட்டு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., இது குறித்து அமைச்சர்கள் வேலு, மற்றும் சேகர்பாபு மூலம் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து கோவில் திருப்பணி வேலை செய்ய ரூ.2.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று திருப்பணி வேலைகள் துவக்குவதற்கான பாலாலய பூஜை நடந்தது. வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, திருப்பணி வேலைகளை துவக்கி வைத்தார். ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணை சேர்மன் நெடுஞ்செழியன், அட்மா குழு தலைவர் அண்ணாதுரை, ஹிந்து அறநிலையத்துறை ஆய்வாளர் புகழேந்தி, ஊராட்சி தலைவர் சுஜாதா சுகுமார், தர்மகர்த்தா சாம்ராஜ் முன்னிலை வகித்தனர்.
குருக்கள் ராமநாதன், சுந்தரமூர்த்தி, ஸ்ரீதர் ஆகியோர் பூஜைகளை செய்தனர். பி.டி.ஓ.,க்கள் கொளஞ்சிவேல், மோகன், பெருமாள், துணைத்தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர் பச்சையம்மாள், கணேசன், பழனிசாமி, கலியன், நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.