ADDED : ஜன 18, 2026 05:21 AM

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் தமிழ்ச்சங்கம் சார்பில் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொருளாளர் விஜயகுமார், தியாகதுருகம் முத்தமிழ்ச்சங்கத் தலைவர் நாகராஜன், அவ்வை தமிழ்ச் சங்கத் தலைவர் கல்யாணி முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜகோபால் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் தியாகதுருகம் திருக்குறள் பேரவைத் தலைவர் பழனிவேல் திருவள்ளுவரின் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச்சங்கத் தலைவர் துரைமுருகன் திருக்குறள் முப்பால் எனும் தலைப்பில் பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது. தமிழ்ச் சங்க நிர்வாகிகள் கிட்டப்பா, மணிகண்டன், செல்வம், சீனிவாசன், வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏழுமலை நன்றி கூறினார்.
