/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிவோர் தமிழக அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிவோர் தமிழக அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிவோர் தமிழக அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிவோர் தமிழக அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 23, 2024 11:07 PM
கள்ளக்குறிச்சி: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த தனிநபர் மற்றும் சேவை நிறுவனங்கள், தமிழக அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் டிச., 3ம் தேதி நடக்கும் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிபவர் மற்றும் நிறுவனங்களுக்கு அரசு விருது வழங்க உள்ளார்.
இதில் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகள், கற்பிக்கும் சிறப்பாசிரியர்கள், குறைபாடுள்ள சிறந்த மாற்றுத்திறனாளிகள், ஏதேனும் ஒரு துறையில் முன்மாதிரியாக சிறந்து விளங்கும் மாற்றுத்திறனாளிகள், சிறப்பாக சேவை புரியும் தனிநபர், அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் தனியார் துறைகள், சேவை புரியும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர், பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிளுக்கு தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
ஒவ்வொரு விருதிற்கும் 10 கிராம் எடை கொண்ட தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
விருதுகளுக்கு விண்ணப்பிப்போர் awards.tn.gov.in என்ற வலைதள முகவரியில் வரும் 28ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அன்றைய தினமே விண்ணப்பத்தின் இரண்டு நகல்கள் உரிய தகுதி சான்றுகளுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடமும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.