/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சகோதரர்கள் மோதல் மூன்று பேர் கைது
/
சகோதரர்கள் மோதல் மூன்று பேர் கைது
ADDED : ஜூலை 07, 2025 02:27 AM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் வீட்டுமனை பிரச்சனையில் தம்பியை, அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் கத்தியால் வெட்டிய சம்பவத்தில், மூவரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அய்யர், 55; இவரது சகோதரர் ராஜி, 57; இருவருக்கும் வீட்டு மனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. நேற்று காலை இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ராஜிக்கு ஆதரவாக அவரது மனைவி பார்வதி, 45; மகன்கள் சவுந்தர ராஜன், 36; ராஜ்குமார், 26; மகள் சவுந்தர்யா, 29; ஆகியோர் சேர்ந்து, அய்யரை அடித்து கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த அய்யர் திருவண்ணாமலை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அய்யர் மனைவி நவநீதம் அளித்த புகாரின்பேரில், ராஜி, சவுந்தர்ராஜன், ராஜ்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.