ADDED : அக் 12, 2025 04:39 AM
கச்சிராயபாளையம் : கடத்துார் கிராமத்தில் ஆடு திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயாபாளையம் அடுத்த கடத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் லோகநாதன், 37; இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஆடுகள் பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு, மர்ம நபர்கள் மூன்று பேர் லோகநாதனுகு சொந்தமான ஆட்டை பைக்கில் கடத்திச் செல்ல முயன்றனர். ஆடுகள் திருடி செல்வதை உணர்ந்த லோகநாதன் கூச்சலிட்டார்.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பைக்கில் ஆடு திருடிய நபர்களை மடக்கி பிடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கச்சிராயபாளையம் போலீசார் ஆடு திருடிய கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மகன் சின்னராசு, 23; குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் மணி, 20; கார்னுார் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சிவப்பிரகாசம், 24; ஆகியோரை கைது செய்தனர்.