/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக் மீது வேன் மோதி விபத்து சின்னசேலத்தில் 3 பேர் பரிதாப பலி
/
பைக் மீது வேன் மோதி விபத்து சின்னசேலத்தில் 3 பேர் பரிதாப பலி
பைக் மீது வேன் மோதி விபத்து சின்னசேலத்தில் 3 பேர் பரிதாப பலி
பைக் மீது வேன் மோதி விபத்து சின்னசேலத்தில் 3 பேர் பரிதாப பலி
ADDED : ஆக 08, 2025 02:40 AM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் புறவழிச்சாலையில், மகேந்திரா பிக் அப் லோடு வேன் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த நாகுப்பத்தை சேர்ந்தவர்கள் தங்கராசு மகன் தினேஷ், 25; அய்யம்பெருமாள் மகன் வெங்கடேசன், 26; பழனிசாமி மகன் சிவசக்தி,25; நண்பர்களான இவர்கள் மூவரும், நேற்று இரவு 9:00 மணியளவில், ஸ்பிளெண்டர் பைக்கில் சின்னசேலம் புறவழிச்சாலை வழியாக அம்மையகரம் நோக்கி சென்றனர்.
சின்னசேலம் ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, அதே திசையில் கொய்யாப்பழம் ஏற்றி சென்ற மகேந்திரா பிக்அப் லோடு வேன் (டிஎன்12- ஏயு1942) பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் தினேஷ், வெங்கடேசன், சிவசக்தி ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த தினேஷ் பஞ்சர் கடை வைத்துள்ளார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. வெங்கடேசன், சிவசக்தி இருவரும் லாரி டிரைவராக உள்ளனர்.
விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.