/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தடை செய்த குட்கா பொருட்கள் விற்பனை செய்த மூன்று பேர் கைது அரசு பஸ் டிரைவர், கண்டக்டருக்கு வலை

ADDED : செப் 19, 2024 11:52 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்த வழக்கில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்து மூவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் வெளிமாநிலங்களில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் நேற்று காலை 9 மணிக்கு பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பத்மநாபன்,43; டி.எம்.எஸ்., நகர் ராஜேஷ்,40; கச்சேரி ரோடு சேர்ந்த திலீப்கிருஷ்ணன்,45; ஆகியோர் தங்களது கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு வைத்திருந்தது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் பத்மநாபன் பெங்களூரில் இருந்து அரசு பஸ்சில் குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் புகையிலை பொருட்களை கடத்தி வருவதற்கு சங்கராபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் அரசு பஸ் டிரைவர் மேலாநந்தல் சேர்ந்த செல்வராஜ், நடத்துனர் கொசப்பாடி மணிவேல் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் பத்மநாபன் கடை மற்றும் வீடுகளில் 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.85 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் அரசு பஸ் டிரைவர் செல்வராஜ், நடத்துனர் மணிவேல் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிந்து பத்மநாபன், ராஜேஷ், திலீப்கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.