/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதியவரை கொன்ற வழக்கு : கோர்ட்டில் மூவர் சரண்
/
முதியவரை கொன்ற வழக்கு : கோர்ட்டில் மூவர் சரண்
ADDED : பிப் 20, 2025 12:11 AM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே முதியவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் மூன்று பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா மனைவி சத்யா. கடந்த 17ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த அருள்,45; என்பவர், சத்யாவிடம் ஸ்கூட்டி மொபட் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் அருள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை, சத்யாவின் உறவினர்களான சிலம்பரசன்,40, கவியரசன், 35; செந்தில், 40; ஆகியோர் தட்டிக் கேட்டனர்.
ஆத்திரமடைந்த சிலம்பரசன், கவியரசன், செந்தில் ஆகியோர் அருளின் உறவினர் நாராயணசாமியை கத்தியால் குத்தியதியதில் அவர் அதே இடத்தில் இறந்தார். உடன் மூவரும் தலைமறைவாகினர். உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரையும் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று உளுந்துார்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சிலம்பரசன், கவியரசன், செந்தில் ஆகிய மூவரும் சரணடைந்தனர்.

