/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'வி.ஏ.ஓ.,வை மிரட்டினேனா' தி.மு.க., எம்.எல்.ஏ., விளக்கம்
/
'வி.ஏ.ஓ.,வை மிரட்டினேனா' தி.மு.க., எம்.எல்.ஏ., விளக்கம்
'வி.ஏ.ஓ.,வை மிரட்டினேனா' தி.மு.க., எம்.எல்.ஏ., விளக்கம்
'வி.ஏ.ஓ.,வை மிரட்டினேனா' தி.மு.க., எம்.எல்.ஏ., விளக்கம்
ADDED : பிப் 08, 2025 07:04 AM

கள்ளக்குறிச்சி: ''மக்கள் பிரச்னைகளுக்காக பல நாட்களுக்கு முன் வி.ஏ.ஓ.,விடம் பேசியதை, தற்போது சிலர் அரசியலாக்கி வருகின்றனர்'' என எம்.எல்.ஏ., உதயசூரியன் கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் மேற்கு பகுதி வி.ஏ.ஓ., தமிழரசி. சஸ்பெண்ட் செய்யப்பட்ட கிராம உதவியாளர் சங்கீதா, கடந்த 4ம் தேதி தமிழரசி மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றியது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, வி.ஏ.ஓ., தமிழரசியை, சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ., உதயசூரியன் மொபைல் போனில் மிரட்டியதாக ஆடியோ வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து, உதயசூரியன் எம்.எல்.ஏ., நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
நான் 5 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளேன். மக்கள் பிரச்னைகள், கோரிக்கை தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். கடந்த டிசம்பர் மாதம் பெஞ்சல் புயல் மழை பாதிப்பு தொடர்பாக கல்வராயன்மலை, கச்சிராயபாளையம் சுற்று வட்டார பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டேன்.
அப்போது, பொதுமக்கள் பலர் மழை பாதிப்பு பணிகளை மேற்கொள்வதில் வி.ஏ.ஓ., தமிழரசி மீது புகார் தெரிவித்தனர். இதனால் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பொதுமக்கள் முன்னிலையில் அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மக்களுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன்.
நான் பேசியது டிசம்பர் 1ம் தேதி. தற்போது, வி.ஏ.ஓ., - கிராம உதவியாளர் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்னையில் வி.ஏ.ஓ.,வை மிரட்டியதாக இட்டுக்கட்டி, தவறாக பரப்பி வருகின்றனர்.
திராவிட மாடல் ஆட்சியில் எம்.எல்.ஏ., அதிகாரிகளை மிரட்டுகிறார் என ஒரு சிலர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். மக்கள் பிரதிநிதியான நான் மக்களின் பிரச்னைக்காக அதிகாரிகளிடம் பேசுவது எனது கடமை, உரிமையாகும்.
இவ்வாறு உதயசூரியன் எம்.எல்.ஏ., கூறினார்.