sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் 

/

 செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் 

 செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் 

 செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் 


ADDED : பிப் 08, 2026 02:57 AM

Google News

ADDED : பிப் 08, 2026 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே செம்மண் கடத்திய டிப்பர் லாரியை புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர் பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.

கள்ளக்கறிச்சி மாவட்டம், பொரசக்குறிச்சி பகுதியில் அரசு அனுமதியின்றி செம்மண் அள்ளப்படுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் ராஜவேல், 32; நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் ரோந்து சென்றார். அப்போது, பொரசக்குறிச்சியில் இருந்து மலைக்கோட்டாலம் நோக்கி சென்ற டி.என். 51.எப்.9948 பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை நிறுத்திய போது, வாகனத்தை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடினார்.

தொடர்ந்து லாரியை சோதனை செய்த போது, அரசு அனுமதியின்றி 3 யூனிட் செம்மண், செங்கல் சூளைக்கு கடத்தி சென்றது தெரிந்தது. உடன், லாரியை பறிமுதல் செய்து வரஞ்சரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். டிப்பர் லாரி உரிமையாளர் மலைக்கோட்டாலத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் வெங்கடேசன் மற்றும் தப்பி ஓடிய டிரைவர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us