ADDED : ஜன 06, 2025 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; விளம்பார் ஏரியில் அனுமதியின்றி கிராவல் மண் திருடிய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விளம்பார் ஏரியில் நின்றிருந்த டிஎண்15 யு2109 என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை சோதனை செய்ததில், கிராவல் மண் இருந்தது தெரிந்தது. விசாரணையில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் திருடியது தெரிந்தது. உடன் டிப்பர் லாரி டிரைவர் தப்பிவிட்டார்.
கள்ளக்குறிச்சி போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய தென்கீரனுாரை சேர்ந்த கருப்பன் மகன் சுரேஷ்,35; மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.