/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீடு புகுந்து திருடிய பெண்ணிற்கு சிறை திருக்கோவிலுார் கோர்ட் தீர்ப்பு
/
வீடு புகுந்து திருடிய பெண்ணிற்கு சிறை திருக்கோவிலுார் கோர்ட் தீர்ப்பு
வீடு புகுந்து திருடிய பெண்ணிற்கு சிறை திருக்கோவிலுார் கோர்ட் தீர்ப்பு
வீடு புகுந்து திருடிய பெண்ணிற்கு சிறை திருக்கோவிலுார் கோர்ட் தீர்ப்பு
ADDED : பிப் 15, 2024 07:00 AM

திருக்கோவிலுார் : பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருடிய பெண்ணிற்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து திருக்கோவிலுார் கோர்ட்டில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகரை சேர்ந்தவர் அன்புநிலவன், 61; ஓய்வு பெற்ற சுகாதார அலுவலர். இவரது மனைவி ஆசிரியர் அல்லிராணி; இருவரும் கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி வேலைக்கு சென்ற நிலையில், அன்புநிலவனின் தந்தை பழனிசாமி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த பெண் ஒருவர், பழனிசாமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டார்.
பின், அவரிடம் நைசாக பேசி, வீட்டிற்குள் சென்று, பீரோவில் இருந்த 22 சவரன் நகை மற்றும் 62 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றார்.
இதுகுறித்து அல்லிராணி கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில் கிடைத்த தகவலின்பேரில், கிருஷ்ணகிரி மாவட்டம், பெரிதள்ளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மனைவி மைதிலி, 40, என்பவரை கைது செய்து, அவர் மீது திருக்கோவிலுார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வெங்கடேஷ்குமார், வீடு புகுந்து திருடிய மைதிலிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
அதனையொட்டி அவர் வேலுார் சிறையில் அடைக்கப்பட்டார்.

