/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டிராக்டர் மோதி விபத்து விரிவுரையாளர் பலி
/
டிராக்டர் மோதி விபத்து விரிவுரையாளர் பலி
ADDED : பிப் 08, 2025 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே டிராக்டர் மோதிய விபத்தில், விரிவுரையாளர் இறந்தார்.
விழுப்புரம் அடுத்த கருங்காலிப்பட்டு கிராமத் தைச் சேர்ந்தவர் விஜய குமார், 40; திருவெண்ணெய் நல்லுார் அரசு கலைக் கல்லுாரியில் விலங்கியல் துறையில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.
இவர், நேற்று காணையில் இருந்து கருங்காலிப்பட்டு கிராமத்திற்கு பைக்கில் சென்றார். காணை அழகம்மாள் கோவில் அருகே சென்றபோது, டிப்பருடன் கூடிய டிராக்டரில் சிக்கி படுகாயமடைந்தார்.
உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் விஜயகுமார் இறந்தார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.