/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.91.48 லட்சம் வர்த்தகம்
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.91.48 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.91.48 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.91.48 லட்சம் வர்த்தகம்
ADDED : பிப் 17, 2025 11:56 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 91.48 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு 1,100 மூட்டை உளுந்து, மக்காச்சோளம் 300, கம்பு 40,வரகு 20, எள் 4, மணிலா 2, தலா ஒரு மூட்டை ராகி, தட்டைப்பயிர், பச்சைப்பயிர் என மொத்தம் 1,469 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஒரு மூட்டை உளுந்து 7,639 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 2,463, கம்பு 2,476, வரகு 2,066, எள் 11,886, மணிலா 10,005, ராகி 3,789, தட்டைப்பயிர் 4,765, பச்சைப்பயிர் 4,449 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டன. கமிட்டியில் 91 லட்சத்து 48 ஆயிரத்து 459 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 145, வரகு 15, உளுந்து 3 மூட்டைகள் என மொத்தம் 163 மூட்டை விளை பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,430 ரூபாய்க்கும், வரகு 2073, உளுந்து 6,544 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டன. 3 லட்சத்து 86 ஆயிரத்து 534 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் நெல் 399 மூட்டை, உளுந்து 350, கம்பு 48, மக்காச்சோளம் 21, தலா ஒரு மூட்டை எள், பச்சைப்பயிறு என மொத்தம் 820 மூட்டை விளைபொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நெல் 2,225 ரூபாய்க்கும், உளுந்து 7,579, கம்பு 2,503, மக்காச்சோளம் 2,363, எள் 6,586, பச்சைப்பயிறு 6,586 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 35 லட்சத்து 11 ஆயிரத்து 884க்கு வர்த்தகம் நடந்தது.