/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இ-நாம் நடைமுறைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு; இன்று முதல் பொருட்கள் வாங்க மறுப்பு

ADDED : ஜூலை 29, 2025 08:54 PM

உளுந்துார்பேட்டை; பழைய முறையை அமல்படுத்தாததால், இன்று (30ம் தேதி) முதல் கமிட்டியில் பொருட்கள் வாங்குவதில்லை என வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
உளுந்துார்பேட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் முகமதுகனி நிருபர்களிடம் கூறுகையில்;
தமிழகம் முழுவதும் வரும் 1ம் தேதி முதல் மார்க்கெட் கமிட்டியில் இ--நாம் என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரிய ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் சிக்கல் உள்ளது. எனவே பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
இல்லையெனில் இன்று (30ம் தேதி) முதல் கமிட்டியில் விவசாய பொருட்களுக்கு விலை போடுவதில்லை என கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, வேலுார் மாவட்ட வியாபாரிகளால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே அரசு இதற்கு வழிவகை செய்ய வேண்டும். விவசாயிகள் சிரமத்தை போக்க கமிட்டி நிர்வாகத்திடம் தகவல் அறிந்து பொருட்களை கொண்டு வருமாறு கேட்டு கொள்கிறேன் என கூறினார். பின்னர் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுவை, கமிட்டி கண்காணிப்பாளர் வேலனிடம் வழங்கினர்.