UPDATED : அக் 31, 2026 12:00 AM
ADDED : அக் 30, 2026 07:24 PM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே நின்றிருந்த வேன் மீது பிக்கப் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர் மகன் மணிகண்டன், 30; துணி வியாபாரம் செய்து வரும் இவர். சுசுகி ஈகோ வேனில் நேற்று காலை 7.30 மணியளவில் வண்டி பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மழையம்மன் கோவில் அருகே வேனை நிறுத்திவிட்டு சுவாமி கும்பிட்டு வந்து வேனில் அமர்ந்தபோது, கேரளா மாநிலம் இடுக்கி அடுத்த தொட்டப்புழா பகுதியைச் சேர்ந்த சோனி ஜான் மகன் சோனு, 31; என்பவர் ஓட்டி வந்த மகேந்திரா பிக்கப் வேன் சுசுகி ஈகோ வேன் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த மணிகண்டன் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த விபத்தால் அப்பகுதியில் 8:00 மணி வரை போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்துக்குள்ளான வாகனத்தை சாலையோரம் அப்புறப்படுத்தி வாகன போக்குவரத்தை சரி செய்தனர்.
திருநாவலுார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். .
