/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சந்தையால் போக்குவரத்து பாதிப்பு
/
சந்தையால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 20, 2024 11:47 PM
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் சாலையோரம் நடந்த வார சந்தையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரிஷிவந்தியத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வாரச்சந்தை நடைபெறும். இதில் ரிஷிவந்தியம், வெங்கலம், பாசார், முட்டியம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
வாரச்சந்தைக்கென போலீஸ் ஸ்டேஷன் எதிரே தனி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், கட்டடத்தில் போதிய வசதிகள் இல்லை.
மேலும், சந்தை கட்டடத்தில் உள்பகுதியில் கடை இருந்தால் பொதுமக்கள் வர மாட்டார்கள் என கருதும் வியாபாரிகள், சாலையோரத்தில் கடை அமைத்து விற்பனை செய்கின்றனர்.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர். இரவு நேரத்தில் விபத்து அபாயமும் உள்ளது.
எனவே, காய்கறி சந்தை கட்டடத்தை புதுப்பித்து தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

