/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு டவுன் பஸ் - டிப்பர் லாரி மோதல் போக்குவரத்து பாதிப்பு
/
அரசு டவுன் பஸ் - டிப்பர் லாரி மோதல் போக்குவரத்து பாதிப்பு
அரசு டவுன் பஸ் - டிப்பர் லாரி மோதல் போக்குவரத்து பாதிப்பு
அரசு டவுன் பஸ் - டிப்பர் லாரி மோதல் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 04, 2025 11:29 PM

சங்கராபுரம்:சங்கராபுரத்தில் அரசு டவுன் பஸ் - டிப்பர் லாரி மோதிய விபத்தால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சங்கராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து தியாகதுருகம் செல்லும் அரசு டவுன் பஸ் (தடம் எண் 41) நேற்று மாலை 5:00 மணிக்கு, பஸ் நிலையத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு வெளியே வந்தது. கடை வீதி மும்முனை சந்திப்பில் பஸ் வந்தபோது எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி அரசு பஸ் மீது மோதியது.
இதில் அரசு பஸ் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. பஸ் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. பஸ் லாரி மோதிக் கொண்ட விபத்தால், கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்து பாதிப்பினை சீரமைத்தனர். விபத்து குறித்த சங்கராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

