/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
/
சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 15, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அரசம்பட்டில் வி.சி. கட்சியினரின் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்ற வழக்கறிஞரை கைது செய்ய கோரி வி.சி., கட்சியினர், அரசம்பட்டு கிராமத்தில் நேற்று காலை 8:00 மணிக்கு, சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலையில் மறியல் செய்தனர். சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். 40 நிமிடத்திற்கு பிறகு மறியல் விலக்கி கொள்ளப் பட்டது.
இதனால், சங்கராபுரம்-அரசம்பட்டு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.