/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டோல்கேட் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு
/
டோல்கேட் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 03, 2024 06:49 AM

உளுந்தூர்பேட்டை: விழுப்புரம் மாவட்டம், அரசூர் பகுதியில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலியே தொடர் மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. . இதனால் அவ்வழியாக திருச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அப்பகுதியை கடக்க முடியாமல் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சென்னை நோக்கி சென்ற வாகனங்கள் உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே நேற்று பிற்பகல் 1 மணியளவில் நிறுத்தப்பட்டன. இதற்காக சாலையின் நடுவே போலீசார் தடுப்புகளை அமைத்து பஸ்கள் செல்லாத வகையில் நடவடிக்கை எடுத்தனர்.
ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை அறிந்த போலீசார் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை கடந்து மடப்பட்டு வழியாக பெரியசெவலை, விழுப்புரம் வழியாக வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர். அதன் பின்னரே பயணிகள் பெரும் நிம்மதி அடைந்தனர்.