/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
/
விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
ADDED : டிச 06, 2025 06:07 AM

சங்கராபுரம்: எஸ்.வி., பாளையத்தில் உலக மண் வளம் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
சங்கராபுரம் அடுத்த எஸ்.வி., பாளையத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தன் தலைமை தாங்கி, மண் வளத்தை பாதுகாக்கும் முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
வேளாண் அலுவலர் முருகேசன் உழவன் செயலி மூலம் நிலத்தின் மண் தன்மைகள், மண்ணில் உள்ள பேரூட்டம் உள்ளிட்ட நுண்ணுாட்ட சத்துகளை அறிந்து உரம் ஈடுவதின் அவசியம், விவசாய நிலம் உள்ள அனைவரும் விவசாய அட்டை பெற்று பனடையுமாறு தெரிவித்தார்.
பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல், ஆட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்குமார், லோகபிரியா, பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள் மாரிமுத்து, ராகவன், வல்லரசு, ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.
பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

