/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு
/
தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு
ADDED : ஜூன் 20, 2025 04:01 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 - 5ம் வகுப்பு வரை பயிலும் 46 ஆயிரம் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் மாலை நேரத்தில் பாடம் கற்பிக்கப்படுகிறது.
இதற்காக, ஒரு தன்னார்வலருக்கு 20 - 30, மாணவர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் இருப்பிடம் அல்லது பொது இடத்தை தேர்வு செய்து கூடுதலாக, ஒன்றரை மணி நேரம் பாடம் கற்பிப்பதால், அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு மேம்படும்.
சின்னசேலம் வட்டார வள மையத்தில் நடந்த பயிற்சி வகுப்பில், மாவட்ட உதவி திட்ட அலுவலர் மணி பங்கேற்று, தன்னார்வலர்கள் எவ்வாறு பணிபுரிய வேண்டும், பாடங்களை கற்பிக்கும் விதம் குறித்து விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வண்ணத்தமிழன், ராஜா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வராஜ், ஆசிரியர் பயிற்று நர்கள் மணியன், ஆனந்தராசு, அனுராதா, மாவட்ட முதன்மை தன்னார்வலர் நஸ்ரின், ஆசிரியர் பயிற்றுநர் சக்திவேல் கலந்து கொண்டனர்.