/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான பயிற்சி
/
தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான பயிற்சி
ADDED : டிச 09, 2024 07:13 AM

சங்கராபுரம்: பாச்சேரி பள்ளியில் பெண் குழந்தைகளை காப்போம் நிகழ்ச்சி மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான பயிற்சி நடந்தது.
கல்வராயன்மலை, பாச்சேரி கிராமத்தில் உள்ள கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கராபுரம் தாசில்தார் சசிகலா தலைமை தாங்கினார்.
பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் வினோதினி, விஜயலட்சுமி, வருவாய் ஆய்வாளர் திவ்யா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை பத்மஸ்ரீ வரவேற்றார்.
மாணவிகளுக்கு நடந்த பயிற்சி பட்டறையில் குங்குமம், சோப்பு, பினாயில் மற்றும் பல்வேறு விதமான கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஆசிரியர் கண்ணம்மா, செல்வி, ஜெயந்தி செய்திருந்தனர். பள்ளி நிர்வாகி இதாயத்துல்லா நன்றி கூறினார்.