ADDED : ஆக 02, 2025 11:08 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை தாசில்தார் நிலையில் பணிபுரியும் 13 அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
சின்னசேலம் மண்டல துணை தாசில்தாராக பணிபுரிந்த சரவணன், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வரவேற்பு துணை தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், கள்ளக்குறிச்சி தலைமையிடத்து துணை தாசில்தார் பானுபிரியா, சின்னசேலம் மண்டல துணை தாசில்தாராகவும், உளுந்துார்பேட்டை தேர்தல் துணை தாசில்தார் ஷீலாராணி, திருக்கோவிலுார் வட்ட வழங்கல் அலுவலராகவும், திருக்கோவிலுார் வட்ட வழங்கல் அலுவலர் புவனேஷ்வரி உளுந்துார்பேட்டை தேர்தல் துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தலைமை உதவியாளர்களாக பணிபுரிந்த சதீஷ்குமார், திருமலை முறையே வாணாபுரம் தேர்தல் துணை தாசில்தார் மற்றும் சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலராகவும், கல்வராயன்மலை வட்ட வழங்கல் அலுவலர் செல்வகுமார், கள்ளக்குறிச்சி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் துணை தாசில்தார் நிலையில் பணிபுரியும் 13 அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.