/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வழிப்பறி வழக்கில் திருநங்கைக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
/
வழிப்பறி வழக்கில் திருநங்கைக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
வழிப்பறி வழக்கில் திருநங்கைக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
வழிப்பறி வழக்கில் திருநங்கைக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
ADDED : அக் 16, 2025 11:50 PM
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அருகே வழிப்பறி வழக்கில் திருநங்கைக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கும்பகோணம் சந்தன விநாயகர் தெருவை சேர்ந்தவர் கணபதி மகன் சுரேஷ்,37; கடந்த 2013ம் ஆண்டு ஏப்., மாதம் 6ம் தேதி சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு பைக்கில் சென்றார். திருநாவலுார் அடுத்த மேட்டத்துார் அருகே சென்ற போது, வண்டிப்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் (எ) இளவஞ்சி,35; என்ற திருநங்கை, சுரேஷினை மறித்து மிரட்டி ரூ.7,500 பணத்தை பறித்தார். இது குறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்தனர்.
இவ்வழக்கின் இறுதி விசாரணை உளுந்துார்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இதில், இளவஞ்சிக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தும், அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி ஆறுமுகம் உத்தரவிட்டார். தனது வயதான தாய், தந்தையை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை எனவும், மேல்முறையீடு செய்ய காலஅவகாசம் வேண்டும் எனவும் இளவஞ்சி கூறினார். இதையடுத்து, இளவஞ்சியை ஜாமீனில் அனுப்புமாறு நீதிபதி ஆறுமுகம் உத்தரவிட்டார்.