/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மழைக்கால பாதிப்பு, உதவிகளுக்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
/
மழைக்கால பாதிப்பு, உதவிகளுக்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
மழைக்கால பாதிப்பு, உதவிகளுக்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
மழைக்கால பாதிப்பு, உதவிகளுக்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
ADDED : அக் 16, 2025 11:49 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைபாதிப்புகள் மற்றும் இதர உதவிகளுக்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் துவக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்திட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம், 2 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மற்றும் 7 தாலுகா அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம் கட்டுப்பாட்டு அறை இலவச தொலைபேசி எண் 1077 மற்றும் புகார் தொலைபேசி எண் 04151-228801 ஆகும். கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04151-222493 ஆகும். திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04153-252312 ஆகும். தாலுகா அலுவலக கட்டுப்பாட்டு அறை கள்ளக்குறிச்சி வட்டம் 04151-222449, சின்னசேலம் வட்டம் 04151-257400, சங்கராபுரம் வட்டம் 04151-235329, வாணாபுரம் வட்டம் 04151-235400, கல்வராயன்மலை வட்டம் 04151-242333, திருக்கோவிலுார் வட்டம் 04153-252316, உளுந்தூர்பேட்டை வட்டம் 04149-222255 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்களுக்கு மழைபாதிப்புகள் குறித்தும், இதர உதவிகள் ஏதும் தேவைப்பட்டால் மேற்படி 10 கட்டுப்பாட்டு அறைகளை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மழை, இடி, மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகளை முன்னதாகவே தெரிவிக்கும் TN ALERT app-ஐ பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.