/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னக்கொள்ளியூரில் உணவுத்திருவிழா
/
சின்னக்கொள்ளியூரில் உணவுத்திருவிழா
ADDED : அக் 16, 2025 11:49 PM
ரிஷிவந்தியம்: சின்னக்கொள்ளியூர் அரசு துவக்கப்பள்ளியில் உணவுத்திருவிழா நேற்று நடந்தது.
வாணாபுரம் அடுத்த சின்னக்கொள்ளியூர் துவக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவினா, ஒன்றிய கவுன்சிலர் பன்னீர்செல்வம், ஊராட்சி துணைத்தலைவர் அர்ச்சனா, முன்னாள் ஊராட்சி தலைவர் ராசாத்தி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோவிந்தராஜ், பகண்டைக்கூட்ரோடு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
உலக உணவு தினத்தையொட்டி மாணவர்கள் பல்வேறு வகையான உணவு பொருட்களை காட்சி படுத்தி, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.
சிறந்த உணவு காட்சிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
உதவி ஆசிரியர் ஏசுதாஸ் நன்றி கூறினார்.