/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மரியாதை
/
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மரியாதை
ADDED : அக் 16, 2025 11:49 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட நாயுடு சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, நாயுடு சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், தமிழக நாயுடு கூட்டமைப்பு மாநில துணை தலைவர் செங்குட்டுவன், கவுரவ தலைவர் சுப்ராயலு ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். நிகழ்ச்சியில், சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டியன் கட்டபொம்மனின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு நிர்வாகிகள் பலர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட பொருளாளர் கொளஞ்சியப்பன், துணை செயலாளர் மவுலிகா ராதாகிருஷ்ணன், இளைஞரணி தலைவர் அருண், துணை செயலாளர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.