/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 10, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: அரசு போக்குவரத்துக் கழக திருக்கோவிலுார் கிளை பணிமனை முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் இரண்டாம் நாளான நேற்று மணம்பூண்டியில் உள்ள திருக்கோவிலுார் போக்குவரத்து கழக கிளை பணிமனை முன்பாக அண்ணா தொழிற்சங்க தலைவர் நெடுஞ்செழியன் தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.
இதில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு சங்கங்களை சேர்ந்த பணியாளர்களும் பங்கேற்றனர்.