/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீ விபத்தில் வீடிழந்த குடும்பங்களுக்கு த.வெ.க., நிவாரண உதவி வழங்கல்

ADDED : நவ 03, 2024 11:23 PM

உளுந்துார்பேட்டை: பெரும்பாக்கத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி, அம்சா ஆகியோரது வீடுகள் சில தினங்களுக்கு முன் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழக கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் மோகன் தலைமையில் நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, மளிகை பொருட்கள், அரிசி, காய்கறிகள், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
திருநாவலுார் ஒன்றிய தலைவர் சக்திவேல், நிர்வாகிகள் கண்ணன், பிரதீப் சசிகுமார், பிரேம் அருள், பாரதிராஜா, சுபாஷ், ஹரிநாகராஜ், சுபாஷ்வினோத் உட்பட பலர் உடனிருந்தனர்.