ADDED : ஆக 29, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, கலெக்டர் தலைமையில் நடந்தது.
திருக்கோவிலுார் நகராட்சியின் பூங்காக்கள் மற்றும் பொது இடங்கள், ரவுண்டானாக்கள், சாலையோரம் என 19 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான துவக்க நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அஷ்டலஷ்மி நகரில் உள்ள பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷ்னர் திவ்யா வரவேற்றார். கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
நகராட்சி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், துப்புரவு ஆய்வாளர் கோபிநாத் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.
