ADDED : ஏப் 21, 2025 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை, ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
சார்பு நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார். குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் கோமதி, அமித்சிங் ராஜா, அரசு வழக்கறிஞர் இளமுருகன், மூத்த வழக்கறிஞர் ராவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

