ADDED : செப் 20, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலையோரம் மரக்கன்று நடும் பணி நடந்தது.
கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை இருவழிச்சாலை 200 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. சாலை அகலப்படுத்தும் பணிக்கு இடையூறாக இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் அகற்றப்பட்டது.
தற்போது, 80 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையோரம் புங்கன், வேங்கை, வேம்பு, புளி, வாதநாராயணன் ஆகிய மரங்கள் நடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.