/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி அஞ்சலக விழிப்புணர்வு பேரணி
/
ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி அஞ்சலக விழிப்புணர்வு பேரணி
ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி அஞ்சலக விழிப்புணர்வு பேரணி
ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி அஞ்சலக விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 12, 2025 11:09 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தலைமை அஞ்சலகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த விழிப்புணர்வு பேரணிக்கு விருத்தாச்சலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் தலைமை தாங்கி, பேரணியை துவக்கி வைத்தார். ஆக., 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, அனைத்து வீடுகளிலும் மூவர்ண கொடி ஏற்றி கொண்டாட வேண்டும், தேசிய ஒற்றுமை காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி நடந்தது.
கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுாரில் உள்ள தலைமை அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்படும் தேசியக்கொடியை ரூ.25 செலுத்தி பொதுமக்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
பேரணி தலைமை அஞ்சலகத்தில் இருந்து புறப்பட்டு கச்சிராயபாளையம் சாலை வழியாக காரனுார் பஸ் நிறுத்தம் வரை சென்று, மீண்டும் அஞ்சலகம் அடைந்தது. இதில், அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்றனர்.