ADDED : ஏப் 18, 2025 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட த.வெ.க.,சார்பில் கட்சியின் அடுத்தக்கட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் பூத்கமிட்டி மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
கண்ணன் மகாலில் நடந்த கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ராமு முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம், கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி பணிகளுக்கு தீவிரமாக உறுப்பினர்களை சேர்ப்பது, வரும் சட்டசபை தேர்தலில் தீவிரமாக தேர்தல் பணியாற்றுவது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.
நிர்வாகிகள் சுதாகர், ரவி, வரதன், திலீப்குமார், சுப்ரமணியன், ஸ்டாலின், சின்னதுரை, அருண்குமார், கார்த்திக், சந்துரு, கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.