/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
த.வெ.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
த.வெ.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 08, 2025 06:52 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் த.வெ.க., நகர மற்றும் பூத் நிர்வாகிகளுக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட த.வெ.க., சார்பில் 'எனது பூத், த.வெ.க. பூத்' என்ற தலைப்பில் கள்ளக்குறிச்சி நகர, வார்டு நிர்வாகிகள், பூத் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட இணை செயலாளர் வடக்கனந்தல் ராமு, மாவட்ட பொருளாளர் ஜவகர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை செயலாளர் கனிமொழி வரவேற்றார். கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கட்சியினர் முறையாக மேற்கொள்ள வேண்டும். கட்சியில் பூத் கமிட்டி உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும் என்றார்.
இதில் நகர இணை செயலாளர் அருண், நகர பொருளாளர் அருண்குமார், நகர துணை செயலாளர் பாலாஜி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு, பூத் கமிட்டி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் சின்னசேலம், தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளிலும் 'எனது பூத்- த.வெ.க. பூத்' என்ற தலைப்பில் ஆலோசனை கூட்ட ம் நடந்தது.

