/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
லாரி - கார் மோதி விபத்து ஒருவர் பலி; 9 பேர் காயம்
/
லாரி - கார் மோதி விபத்து ஒருவர் பலி; 9 பேர் காயம்
ADDED : செப் 23, 2024 02:28 AM

உளுந்துார்பேட்டை: கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 23; ஒரு வாரத்திற்கு முன் புதிதாக ஸ்விப்ட் டிசையர் கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். நேற்று உறவினர்களுடன் பண்ருட்டியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் புறப்பட்டார்.
காரை தமிழ்ச்செல்வன் ஓட்டினார். மதியம், 2:10 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த அ.குரும்பூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, உளுந்துார்பேட்டையில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்ற ஈச்சர் லாரி கார் மீது மோதியது.
இதில், தமிழ்ச்செல்வன் மற்றும் காரில் பயணித்த ஆறு பேர், ஈச்சர் லாரியை ஓட்டி வந்த உளுந்துார்பேட்டை அடுத்த மேப்புலியூர் பொன்னன், 45, மற்றும் லாரியில் அவருடன் பயணித்த நான்கு பேர் என, 10 பேர் படுகாயமடைந்தனர்.
உளுந்துார்பேட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் அவர்களை மீட்டனர். தமிழ்ச்செல்வன் இறந்தார். மற்றவர்கள் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.