/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லுாரி தரமான தொழில்நுட்பக் கல்விக்கான முன்னோடி
/
டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லுாரி தரமான தொழில்நுட்பக் கல்விக்கான முன்னோடி
டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லுாரி தரமான தொழில்நுட்பக் கல்விக்கான முன்னோடி
டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லுாரி தரமான தொழில்நுட்பக் கல்விக்கான முன்னோடி
ADDED : அக் 01, 2025 12:44 AM

தரமான தொழில்நுட்பக் கல்விக்கு முன்னோடியாக டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லுாரி இருப்பதாகவும், 100 சதவீத வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதாகவும் அதன் நிர்வாக இயக்குநர் மனோகர்குமார், செயலாளர் அசோக்குமார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி அடுத்த மேலுாரில் கடந்த 2010ம் ஆண்டு துவங்கப்பட்ட டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லுாரி தனித்துவமான உயர் தர தொழில்நுட்ப கல்வியை வழங்குகிறது.
26.70 ஏக்கர் பரப்பளவில் இயற்கையான சூழலில் உள்ள இக்கல்லுாரி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது.
இக்கல்வி நிறுவனத்திற்கு, ஏ.ஐ.சி.டி.இ., டில்லி அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தரமான தொழில்நுட்பக் கல்விக்கு முன்னோடியாகவும், 100 சதவீத வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரப்படுகிறது.
மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு ஆராய்ச்சி பணிக்கு தேவையான ஆக்கபூர்வமான சூழலை வழங்கி, தொழில்துறையின் தேவையை பூர்த்தி செய்வதே கல்லுாரியின் உயரிய நோக்கமாகும். தற்போது 5 இளநிலை பொறியியல் பிரிவுகளும், 4 முதுநிலை பொறியியல் பிரிவுகளும் இயங்கி வருகின்றன.
கல்லுாரி முதல்வர் டாக்டர் ஈஸ்வரன், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் பிஎச்.டி., முடித்து, யு.ஜி.சி., ராஜிவ்காந்தி நேஷனல் பெல்லோஷிப் பெற்றுள்ளார்.
கல்லுாரி செயலாளர் அசோக்குமார், சமூக பொறுப்புணர்வுடன் கல்வியை இணைத்து, 'உன்னத பாரத் அபியான்' திட்டத்தை 5 கிராமங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார். என்.எஸ்.எஸ்., மூலம் மாணவர்கள் சமூகப்பணியில் ஈடுபட்டு, கிராம மேம்பாட்டிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களித்து வருகின்றார்.
மாணவர்களின் முன்னேற்றத்தை முழு நோக்கமாக கொண்ட இக்கல்லுாரியில் கல்வி மட்டுமின்றி, விளையாட்டு, கலாச்சாரம், புதுமை திட்டங்கள் ஆகியவற்றிலும் சிறந்து விளங்குகிறது.
பல முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, 100 சதவீத வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தி வருகிறது.
இவ்வாறு மனோகர்குமார், அசோக்குமார் தெரிவித்தனர்.