/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் முன்னணி பேரூராட்சியாக உருவெடுக்கிறது மணலுார்பேட்டை; பேரூராட்சி தலைவர் ரேவதி ஜெய்கணேஷ் பெருமிதம்

ADDED : அக் 01, 2025 12:47 AM

அமைச்சர் ஏ.வா.வேலு தலைமையில், எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் வழிகாட்டுதலுடன் மணலுார்பேட்டை பேரூராட்சி புது பொலிவு பெற்று வருக்கிறது என பேரூராட்சி தலைவர் ரேவதி ஜெய்கணேஷ் கூறினார். மேலும் அவர் கூறியதாவது;
கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஏ.வா.வேலு தலைமையில், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வின் வழிகாட்டுதலுடன் மணலுார் பேட்டை பேரூராட்சிக்கு அதிக நீதி ஒதுக்கப்பட்டு வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக ரூ. 39 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் சீரமைப்பு பணி, ரூ. 1.24 கோடி மதிப்பில் புதிய பேரூராட்சி அலுவலகம், ரூ. 1.22 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய விரிவாக்கம், ரூ. 22 லட்சம் மதிப்பில் புதிய நுாலகம், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுற்றுச்சுவர் கட்டுமானம், ரூ. 4 கோடி மதிப்பில் பேரூராட்சியின் பெரும்பாலான சாலைகள் தார் சாலைகளாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.
கழிவுநீர் கால்வாய் மேம்பாட்டு பணிகளும் நடக்கிறது. அனைவருக்கும் சுகாதாரமான தடையற்ற குடிநீர் வழங்க ஏதுவாக தென்பெண்ணை ஆற்றில் திறந்த வெளி கிணறு விரிவுபடுத்தப்பட்டு குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேரூராட்சி மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைப்பதுடன் அரசின் நலத்திட்ட உதவிகள் முழுமையாக மக்களை சென்றடையும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு வழிகாட்டியாக இருக்கும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேரூராட்சி உதவி இயக்குனர் வெங்கடேசன், செயல் அலுவலர் சம்பத்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் அரவணைப்புமே மாவட்டத்தின் முன்மாதிரி பேரூராட்சியாக உருவெடுத்துக் கொண்டிருக்க காரணம் என ரேவதி ஜெய்கணேஷ் கூறினார்.