/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காசநோய் ஒழிப்பு: மினி மாரத்தான்
/
காசநோய் ஒழிப்பு: மினி மாரத்தான்
ADDED : பிப் 21, 2025 05:00 AM

கள்ளக்குறிச்சி: விருத்தாசலம் அஞ்சல் கோட்டம் சார்பில், 'காசநோய் இல்லா தமிழகம்' எனும் விழிப்புணர்வு 'மினி மாரத்தான்' நடந்தது.
மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் பிரசாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி தலைமை தபால் நிலையம் வரையிலான போட்டியில் மாவட்டம் முழுதுமிருந்து 120 அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்றனர்.
ஓட்டத்தின் போது விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை, கள்ளக்குறிச்சி உதவி கோட்ட கண்காணிப்பாளர் சுந்தரேசன் செய்திருந்தார். மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாலினி, சுகாதார அலுவலர் ராஜா, மருத்துவக்கல்லுாரி முதல்வர் பவானி ஆகியோர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி அஞ்சல் ஆய்வாளர் செல்வ கணேசன் நன்றி கூறினார்.